புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி – துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக இருவரும் பரஸ்வரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிரண் பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.

இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில் கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற தகவலும் உலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே