தாதா சாகேப் பால்கே விருது – தமிழ் திரையுலக நடிகர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் சிறந்த கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், டூ லெட் படத்திற்கு தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்திற்கான விருதும், தனுஷ்-க்கு சிறந்த நடிகருக்கான விருதும், அஜித் குமாருக்கு பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக சிறப்பு விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசுரன் படத்திற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

அதுபோல ஜோதிகாவுக்கு (ராட்சசி) சிறந்த நடிகைக்கான விருதும், ஆர்.பார்த்திபனுக்கு (ஒத்தசெருப்பு சைஸ் 7) சிறந்த இயக்குனருக்கான விருதும், அனிருத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருது பெரும் நடிகர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய நடிகர் அஜித் குமார், தனுஷ், பார்த்திபன், நடிகை ஜோதிகா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே