கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அவர் சென்று வந்த இடங்கள், அவரது உணவகம், தொழில் செய்யும் அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே