கேஜிஎஃப் 2 புதிய அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

கேஜிஎஃப்2 படத்தின் டீசர் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் டீசர் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 8ம் தேதி காலை 10.18 மணிக்கு டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் நாயகன் யாஷ், கெத்தாக அமர்ந்திருக்கிறார்.

கேஜிஎஃப் அப்டேட்டை சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே