கொரோனா-வை எதிர்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கேரள அரசு

கொரோனா-வை எதிர்கொள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன் 20,000 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கேரள மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவ கண்காணிப்பு வளையத்துக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தின் முக்கிய தொழிலான சுற்றுலா, கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அனைத்து தொழில்களும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மக்களுக்காக 20,000 கோடி ரூபாய்க்கான திட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகம் முழுவதும் 166 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளது.

கேரள மாநிலத்தில் புதிதாக காசர்கோட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 25 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். 31,173 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

அதில், 237 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

கொரோனாவால் நாம் பெரிய பிரச்னையை சந்தித்து வருகிறோம். சாதாரண மக்களின் வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாய் வீழ்ச்சியையும், மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக இருபதாயிரம் கோடி ரூபாய்க்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

குடும்ப ஸ்ரீ திட்டம் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு லோன் வழங்கப்படும்.

இதற்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்று வழங்கினோம்.

மாநிலம் முழுவதும் ஆயிரம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு, அதில் அனைவருக்கும் 20 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அவசர நோயாளிகளைக் கொண்டு செல்லவும், உணவு மருந்துகள் கொண்டு செல்லவும் ஹெலிகாப்டர் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாம் இப்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியது`சாரீரிக அகலம், சாமூகிக ஒருமை’ அதாவது உடலால் இடைவெளிவிட்டும் சமுதாயத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம் என்றார்.

சினிமா தியேட்டர்களுக்கு கேளிக்கை வரியில் மானியம் அளிக்கப்படும்.

அரசின் அனைத்து நிலுவைத்தொகைகளும் வழங்க 14,000 கோடியும், 500 கோடி ரூபாய்க்கு மெடிக்கல் பேக்கேஜ் செப்டம்பர் மாதம் திறக்க முடிவு செய்திருந்த ஆயிரம் மானிய விலை ஹோட்டல்கள் ஏப்ரல் மாதமே திறக்கப்படும்.

அதில், 25 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சாப்பாடு 20 ரூபாய்க்கு வழங்கப்படும்.

எல்லா குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்.

அந்தியோதயா திட்டத்தில் பலனடைபவர்களுக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி உதசி வழங்கப்படும்.

அதற்காக, 100 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதியோர் பென்சன் பெறுபவர்களுக்கு இரண்டு மாத பென்சன் சேர்த்து வழங்கப்படும்.

அதற்காக, 1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கென 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே