மாநாடு பட ஷூட்டிங்கில் இருக்கும் சிம்பு அசத்தில் லுக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிப்பு மட்டுமல்ல; நடனம், உடையிலும் எப்போது அப்டேட்டாக இருப்பவர் சிம்பு.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின்போது உடல் பருமனாக காட்சியளித்தவர் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிக்க வைக்கிறார்.

அதனால், அவர் எப்போது சமுக வலைதளங்களுக்கு மீண்டும் வந்தாரோ அப்போதிலிருந்தே, சிம்புவின் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களையும் சினிமாத்துறையினரையும் உற்றுநோக்க வைக்கின்றன; வைரலாகின்றன. அதுமட்டுமே காரணம் அல்ல.

எடையைக் குறைத்த உடலோடு கடகடவென்று பட ஷூட்டிங்குகளையும் முடித்து குட் பாய் என்று பெயர் எடுத்து வருவதாலும் அவரை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

கடந்த 9 ஆம் தேதி முதல்  பாண்டிச்சேரியில் மாநாடு ஷூட்டிங் துவங்கியது. இப்படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியபின் தனது பெயரை அப்துல் காலிக் என்றுதான் மாற்றிக்கொண்டார்.

இப்படத்திற்கு, அதே அப்துல் காலிக் யுவனேதான் இசையமைக்கிறார்.

கடந்த 21 ஆம் தேதி மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்த சிம்பு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஈஸ்வரன் படத்தில் தாடியோடு ரசிகர்களை ஈர்த்தவர் மாநாடு படத்தில ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் மார்டன் லுக்கில் மனதைக் கவர்கிறார்.

மங்கலாக ஒளிரும் மின் விளக்கில் சிவப்பு கலர் ஷர்ட்டில், சிவப்பு நிற வாட்ச்சில் செக்க சிவந்த சிம்புவாய் காட்சியளிக்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே