ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..

ரஜினிகாந்தின் 168-வது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் தற்பொழுது அடுத்த திரைப்படமான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பு, மேலும் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்,

இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் சில பிரபலமான காமெடி நடிகரான சூரி மற்றும் சதிஷ் நடிக்கவுள்ளனர்.

மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது,

மேலும் சில நெட்டிசன்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு கீர்த்திசுரேஷ் தங்கையாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே