பிரபல திரைப்பட நடிகர் பாலா சிங் காலமானார்..!!!

அவதாரம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் பாலா சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

வில்லன், குணசித்திர என பல வேடங்களில் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாலா சிங்.

நாசர் இயக்கி, நடித்த அவதாரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானவர்.

தொடர்ந்து இந்தியன், ராசி, புதுப்பேட்டை, மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பாலா சிங் தமிழ்சினிமா மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

67 வயதாகும் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே