நாகர்கோவில் காசி மீதான பாலியல் மோசடி வழக்குகள் CBCID-க்கு மாற்றம்

பல பெண்களை ஏமாற்றி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட காசி வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர், தமிழகம் முழுவதும் மாணவிகள் உட்பட பல பெண்களை ஏமாற்றி, பாலியல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதனை வீடியோவாக எடுத்து பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பல்வேறு பெண்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், 2 முறை காவலில் எடுத்து விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற டிஜிபி திரிபாதி, காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், காசி விவகாரத்தில் அவருக்கு உதவிய நண்பர்கள் சிலர், விசாரணை வளையத்திற்குள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே