இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகள் , 3 ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர் , ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி.

இத்தொடருக்கு முன்பு நவம்பர் 21-25 தேதிகளில் பெர்த்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.

இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

2018-2019 -ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது. 

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை ; முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன் , 2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு) , 3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் , 4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே