கரூர் : அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கரூர் மாவட்ட அதிமுக மற்றும் சார்பு அணிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 103வது பிறந்தநாள் விழா கரூரின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் வெங்கமேட்டில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும், கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கண்ணதாசன், துணைத் தலைவர் முத்துக்குமார், கரூர் மத்திய நகர அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் ஜெயராஜ், வடக்கு நகர செயலாளர் பாண்டியன், கிருஷ்ணராயபுரம் மேற்குஒன்றிய செயலாளர் பொரணி கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், கரூர் தெற்கு நகரம் சார்பில் தாந்தோணிமலை நகராட்சி அலுவலகம் முன்பு தெற்கு நகர செயலாளர் ஜெயராஜ் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

மேலும், கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் வெங்கமேடு ஐயப்பன் கோவில் அருகில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு, வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே