கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது!! (வீடியோ)

கரூர் மாவட்டம் தோகமலையை அடுத்த ராச்சாண்டார் திருமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பமானது.

சீறிவரும் காளைகளை பிடிக்க காளையர்கள் ஆர்வமாக வரிசைகட்டி நின்றனர்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

மக்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின் அனுப்பிவைக்கப்பட்டனர். பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு, அதில் பார்வையாளர்கள் அமர்த்தப்பட்டனர்.

வீரர்கள் காப்பீடு செய்யப்பட்டும், மிகுந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவாக உள்ளே களமிறக்கப்பட்டனர்.

ரசிகர்களின் கரகோஷத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் காளை அவிழ்த்து விடப்பட்டது.

முதல் காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டியது.

தொடர்ந்து, அடுத்தடுத்த காளைகள் வாடிவாசலில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

போட்டியில் கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே