#BREAKING : கந்த சஷ்டி கவசம் சர்ச்சை : கருப்பர் கூட்டம் யூடியுப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் புதுச்சேரி போலீசாரிடம் சரண்!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பு, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே