தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆக.15 வரை நீட்டிப்பு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், அரக்கோணம் – கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும்.

சென்னை சென்ட்ரல் – டெல்லி இடையேயான ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே