நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து தப்பியது கமல்நாத் அரசு! சட்டசபை ஒத்தி வைப்பு

மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜகவினர் கோரிய நிலையில் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிறகு கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற 26ம் தேதி வரை சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

இதை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் நிறைவெற்ற வேண்டும் என பாஜகவினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே