அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ். அவரின் பூர்விகம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதால் தமிழகமே கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டது.

நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸூம் போட்டியிட்டனர்.

கமலா தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதால் ஆசிய நாடுகள் முக்கியத்துவம் தந்து இந்தத் தேர்தலைப் பார்த்தன.

இந்திய வம்சாவளி அமெரிக்கர் கமலா ஹாரீஸ். கமலா கடந்த 1990 முதல் அரசியலில் முக்கியப் பணிகளை ஆற்றிவருகிறார்.

கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார்.

சென்னையை ரொம்பவே விரும்புபவர் கமலா ஹாரீஸ். சென்னை வரும்போதெல்லாம் தாத்தாவோடு சென்னை கடற்கரையில் உலாவியதையும் தமிழ்நாட்டு இட்லியைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார் கமலா.

கமலா ஹாரீஸின் பூர்வீக ஊர் மன்னார்குடி என்பதால், அவரின் வெற்றிக்காக இங்கே பூஜைகள் நடத்தப்பட்டன.

ஜனநாயகக் கட்சியில் ஜோ பைடன் மக்களின் ஆதரவைப் பெற்று மெஜாரிட்டியை விட பேரதிக வாக்குகள் பெற்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் தேர்வாகிறார். இந்த மகிழ்ச்சியை கமலா ஹாரிஸின் பூர்விக ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே