பொதுவாக பூண்டு, பசும்பால் இரண்டையும் தாய்ப்பால் ஊற அதிகம் சாப்பிடசொல்வார்கள்..

பூண்டுப்பால் மிகவும் எளிய முறையில் நம்முடைய வீட்டிலேயே வெறும் 2 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு எளிய வழிமுறை.

இது முதுகுவலியை மிக வேகமாக போக்கும் தன்மை கொண்டது. முதுகு வலி மட்டுமல்லாமல் நம்முடைய உடலில் மூட்டுகளில் இருக்கும் வலியையும் போக்கும் தன்மை கொண்டது.

இரத்த குழாய்களில் கொலஸ்ட்ரால் ஏற்படுத்தும் அடைப்புகளை கரைத்து சீர்செய்யும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்
பால் 1 கப்
பூண்டு 3 பற்கள்

செய்முறை
1) முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சுங்கள்.

2) பால் காய்ந்ததும் பூண்டு பற்களை பாலில் போட்டு ஒரு 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடுங்கள். 

3) 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

4) வெதுவெதுப்பான சூட்டில் குடியுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே