ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லி கமல் ட்வீட்

டெல்லி வன்முறை குறித்து, நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக எதிர்வினையாற்றிருப்பதை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சபாஷ் நண்பரே நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார்.

தாங்கள் அப்படியே வர வேண்டும் என்றும், இந்த வழி தான் நல்ல வழி என்றும், கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தங்களது முடிவு தனி வழி அல்ல என்றும், ஒரு இனமே, உங்களை வாழ்த்தி வரவேற்கும் என்றும் கமல் கூறியுள்ளார்.

எனவே, தங்களது வருகை உறுதியாகட்டும், வாழ்த்துக்கள் என, நடிகர் ரஜினிகாந்தை, கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே