பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்த நீதிபதி முரளிதர் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயம் அமைப்பு நீதிபதி முரளிதர் மாற்றல் குறித்து பரிந்துரை செய்திருந்தது.

நேற்று டெல்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடம் பெற்ற அமர்வு, பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகிய மூன்று பேர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே