ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கமல்..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவிலும் போராட்டங்கள் வீரியம் அடைய தொடங்கி இருக்கின்றது.

வட கிழக்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பகுதிகளையும் போராட்ட களம் இணைக்க தொடங்கியுள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் தங்களது குரலை அழுத்தமாக பதிவு செய்தவர்களில் முக்கியமானவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும்.

ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்துவிட்ட திமுக தற்போது மீண்டும் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெறும் தேவைப்பட்டால் இந்த பேரணியில் கலந்துகொள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மக்கள்நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் தம்மிடம் போனில் பேசியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை அன்றைய தினமே ஏற்றுக்கொண்டார் கமலஹாசன்.

கண்டிப்பாக திமுக போராட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி கமலஹாசனை சந்தித்து நேரில் அழைப்பு விடுத்தார்.

மக்கள் நீதி மைய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே