2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்குவோம் – அதிமுக தலைமை அறிவிப்பு..!!

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொடக்க விழாவுக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா என இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு, ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும் கட்சியையும், அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி, பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் உயர்நிலையை அடையவும், சமூக நீதி அடைப்படையில் ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயத்தை காத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே