ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது – ஸ்டெர்லைட் ஆலை CEO

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு விதித்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலையின் தலைவர் பங்கஜ் குமார் மற்றும் துணை தலைவர் தனவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, தாமிர ஆலை மூடப்பட்டிருப்பது நாட்டிற்கே பேரிழப்பு.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆலை மூடப்பட்டிருப்பதால் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்ட வர்த்தகத்தில் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஆலை வலுவான காரணங்கள் இன்றி மூடப்படுவதை, மற்ற முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே