ஜோ ரூட் வெற்றி பெற்ற பிறகு தன் நாட்டுப் பிட்சை கடுமையாக விமர்சித்தார்; விராட் கோலி செய்வாரா?

ஆகவே ஒரு விஷயம் புரிகிறது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிட்சைப் பொறுத்தவரை கேப்டன்களின் தலையீடு இருக்க முடியாது என்பதுதான், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறு.

சென்னை, அகமதாபாத் டெஸ்ட் பிட்ச்கள் குறித்து கடும் சர்ச்சைகள் கிளம்ப, இந்திய வீரர்கள் வெளிநாடு சென்று தோற்றால் பிட்சை பற்றி குறைகூறவில்லையே என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

உதாரணமாக அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது ஏன் பிட்சை குறை கூறவில்லை என்று மட்டித்தனமான கேள்விகள் எழுகின்றன. பிங்க் நிறப்பந்து கூடுதல் ஸ்விங் இந்திய பேட்ஸ்மென்கள் ஆடாமல் விட வேண்டிய பந்தையெல்லாம் மட்டையை நீட்டி மரபான பலவீனங்களில் ஆட்டமிழந்தனர், மேலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆடத்தெரியாமல் உடலில் அடி வாங்கினர், இதில் பிட்சின் பங்கு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

அதே போல் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்ற போது வேகப்பந்து வீச்சுக்குச் சாதக ஆட்டக்களம் என்று சொல்லியே போட்டனர், இரு அணிகளுமே 350 ரன்களை ஒரு இன்னிங்ஸில் கூட எட்ட முடியவில்லை. ஆனால் உள்நாட்டு அணி என்பதால் வெல்லும் வழி அவர்களுக்குத் தெரிந்தது, அப்போது விராட் கோலி பிட்சைக் குறை கூறவில்லையே என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. பிட்சை குறை கூற முடியாது ஏனெனில் வெளியே செல்லும் பந்துக்கு மட்டையை நீட்டி நீட்டி அவுட் ஆனார்கள், ரோஹித் சர்மாவை டேல் ஸ்டெய்ன் கடும் கிண்டலடித்தார்.

விராட் கோலி, எப்படி பிலாண்டரிடம் ஆட்டமிழந்தார், 3-4 பந்துகள் அவுட் ஸ்விங்கர் போட்டி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் வாரிக்கொண்டு பிளிக் ஆடப்போய் எல்.பி. ஆகி ஆட்டமிழந்ததைப் பார்த்தோம் இதில் பிட்ச் எங்கு வருகிறது?

விராட் கோலி, எப்படி பிலாண்டரிடம் ஆட்டமிழந்தார், 3-4 பந்துகள் அவுட் ஸ்விங்கர் போட்டி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் வாரிக்கொண்டு பிளிக் ஆடப்போய் எல்.பி. ஆகி ஆட்டமிழந்ததைப் பார்த்தோம் இதில் பிட்ச் எங்கு வருகிறது?


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே