டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி..!!

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் துபாயில் பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டோனிஸ் டக் அவுட் ஆகி வெளியேற மற்றொரு ஆட்டக்காரர் தவான் 15 ரன்களுக்கு வெளியேறினார். ரகானேவும் 2 ரன்களுக்கு வெளியேற, டெல்லி அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் களமிறங்கிய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 38 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை குவித்தது.

ஸ்கோர் விவரம்:

ஸ்ரோயாஸ் – 65*, ரிஷப் பண்ட் – 56, தவான் – 15, அக்சர் பட்டேல் – 9, ஹெட்மெயர் – 5,
ரஹானே – 2, ரபாடா – 0, ஸ்டோனிஸ் – 0

பந்துவீச்சு விவரம்:

மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், கௌல்டர்
நெய்ல் 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டிகாக் 20 ரன்களுக்கும், அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 19 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 68 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் சிறப்பாக ஆட 18.4 ஓவரிலேயே மும்பை அணி 157 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

ரோகித் – 68, இஷான் கிஷண் – 27, டிகாக் – 20, சூர்யகுமார் யாதவ் – 19, பொல்லார்ட் – 9, ஹர்திக் பாண்டியா – 3, க்ருணால் பாண்டியா – 1

பந்துவீச்சு விவரம்:

டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நோர்க்கியா 2 விக்கெட்டுகளும், ரபாடா, ஸ்டோனிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே