சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை 9 காசுகள் உயர்ந்து 5,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்றுசவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.5,188-க்கு விற்பனையானது.
வெள்ளி விலையில் நேற்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.