ஜம்மு காஷ்மீர் : 2 யூனியன் பிரதேசங்கள் உதயமானதால் புதிய படம் வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமான புதிய இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு 2 யூனியன் பிரதேசங்கள் கடந்த 31ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக உதயமாகின.

இதையடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இரு யூனியன் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்தியாவின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து 28 ஆக உள்ளது. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே