கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.  

செட்டிப்பாளையம் L&T புறவழிச்சாலையில் உள்ள மைதானத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இப்போட்டியில் சுமார் 900 காளைகளும், 600க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, ஏராளமான வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசு உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே