சாயம் பூசி செவ்வாழை பழம் விற்பதாக கூறுவது தவறு – உணவு பாதுகாப்புத்துறை

மஞ்சள் வாழைப்பழங்களில் சாயம் பூசி செவ்வாழை பழமாக விற்கப்படும் புகாரில் உண்மையில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவுப் பொருட்களில் கலப்படங்கள் கலப்பதை எப்படி தவிர்க்க வேண்டும்; அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பேட்டியளித்த சென்னை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்தப்படும் எண்ணெய்களை ஒருமுறை மட்டுமே ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்; சிறிய கடைகளுக்கு மறுவிற்பனையை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் மஞ்சள் வாழைப் பழங்களில் சாயம் பூசி செவ்வாழை பழம் என விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோ பொய்யானது என்றும்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே