பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களின் கோரிக்கைகளை உள்நோக்கத்துடன் பார்ப்பது வேதனை – கே.எஸ்.அழகிரி

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

‘மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் கோரிக்கைகளை அரசியல் உள்நோக்கத்துடன் பார்ப்பது வேதனை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு வாக்கு என்பது ஏற்கக் கூடியது அல்ல. வரிவருவாய் அதிகமாக உள்ள மாநிலமும், வரிவருவாப் குறைவாக உள்ள மாநிலமும் ஒன்றாக கருதுவது அநீதி’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

‘ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் தேவை’ என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ள நிலையில் கே.எஸ்.அழகிரி அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே