ஜூன் 3ஆம் நாள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் – இந்திய வானிலை ஆய்வுத் துறை

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் கொளுத்தி வரும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எப்போது வெயில் குறைந்து மழை வரும் என அவர்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.

எனினும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு பிறகு தான் சென்னையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்.

அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு பெய்யும்.

நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது மே 31 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால் தற்போது தாமதமாகும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கேரளாவில் பருவமழை தொடங்க 2 நாட்கள் தாமதம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கணித்துள்ளது. ஜுன் 3 ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கக்கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே