திருவள்ளுவரை இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது – டி.டி.வி. தினகரன் கண்டனம்..!!

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

”சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. 

அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை CBSE மேற்கொள்ள வேண்டும். ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே