சொத்துவரி செலுத்துங்கள் என எச்சரிப்பது மனிதநேயமற்றது – மு.க.ஸ்டாலின்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி கட்ட சொல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் ‘கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை.

வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை “இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ” என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் “சொத்து வரி செலுத்துங்கள்” என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது’ என்று தெரிவித்துள்ளார். 

மேலும் ‘கொரோனா கால ஊழலுக்கு பெயர் போன சென்னை மாநகராட்சி டெண்டர்களை தவிர்த்து தேவையான நிதி நிலையினை சரி செய்யலாம்.

ஆனால் ஒருபக்கம் டெண்டர்களை அனுமதித்துக் கொண்டு மறுபுறம் வரியையும் செலுத்த சொல்லி வற்புறுத்துவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.

சொத்துவரி வசூல் செய்வதை ஆறுமாத காலத்திற்கு ஒத்தி வைக்குமாறும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே