கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது – ஆர்.எஸ்.பாரதி

முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ். பாரதி, சென்னை காவல் ஆணைரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதன் பிறகு சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

முருகனை இழிவாக பேசிய கறுப்பர் கூட்டத்துக்கு ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கறுப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டிவிட்டரில் போலி சமூக வலைத்தளக் கணக்கு மூலம் பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. 

திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சார்பில் காவல்துறையை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலர் திட்டமிட்டு திமுகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்கிறார்கள்.

இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கருணாநிதி ஆட்சியில் இந்துக் கோயில்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது.

அனைத்து மதத் தலைவர்களும் திமுகவுடன் நட்புடன் இருக்கிறார்கள். திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர். தமிழகத்துக்குள் குள்ளநரிக் கூட்டம் நுழைய பார்க்கிறது. அதனை ஒருபோதும் திமுக அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே