முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வரும் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வரும் 29-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்ற அவர், தனது பொறுப்புகளை அதிபரின் செயலகத்தில் நேற்று ஏற்றுக் கொண்டார்.

அப்போது இலங்கை பொதுஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே, வரும் 29-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் கோத்தபய ராஜபக்சே-வை நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.

முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வரும் 29-ம் தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவார் என ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே