இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.
அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது.
இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒரு சில நாட்கள் தங்க விலை குறைந்து வந்தாலும், கொரோனா பொதுமுடக்க நாட்களில் இதுவரை இல்லாத ஏற்றத்தை கண்டது.
நேற்று தங்க விலை அதிரடியாக உயர்ந்ததைத்தொடர்ந்து, இன்று தங்க விலை ரூ.39 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,870 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,032க்கு விற்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்கப்படுகிறது.