தமிழகத்தில் மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,39,352 பேராகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 5 இலக்கத்திலிருந்து 3 இலக்கத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை இன்றைய தினம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 8,38,340 பேராகும். இன்று ஒரே நாளில் 51,644 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. 

இதுவரை 1,61,23,270 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.

அது போல் இன்று ஒரே நாளில் 51,470 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டன.

இதுவரை 1,58,11,552 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 306 ஆண்களுக்கும் 204 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 253 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 521 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

இதுவரை 8,22,468 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 4,517 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,367 பேராகும்.

இன்று சென்னையில் மட்டும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூரில் 4 பேருக்கு செங்கையில் 27 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், கடலூரில் 2 பேருக்கும் திண்டுக்கல்லில் 7 பேருக்கும் ஈரோட்டில் 27 பேருக்கும் நாமக்கல்லில் 12 பேருக்கும் திருவள்ளூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,31,563 பேராகும்.

அரியலூரில் 4,698 பேருக்கும் செங்கல்பட்டில் 51,607 பேருக்கும், கோவையில் 54,500 பேருக்கும், கடலூரில் 24,942 பேருக்கும், தருமபுரியில் 6593 பேருக்கும் காஞ்சியில் 29,281 பேருக்கும் திருவள்ளூரில் 43,594 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே