பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு : பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து முடித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வர உள்ளதையொட்டி அயோத்தியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அம்பேத்கர் மாவட்டத்தில் 8 தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அமைதியை பராமரிக்க 16,000 தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவது கண்காணிக்க தனியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்தை காக்க இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே