தர்பார் திரைப்பட ரிலீசின்போது ஹெலிகாப்டரில் மலர் தூவ தடை!

ரஜினிகாந்த் நடிப்பில் வருகின்ற 9 ஆம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் திரையரங்கில் உள்ள ரஜினி கட்அவுட்டுக்கு மலர் தூவ, ரஜினி ரசிகர்கள் கோரிய அனுமதிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஜினி காந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் தர்பார் திரைப்படத்தினை வெளியிட போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சேலத்திலும் பல்வேறு தியேட்டரில் ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியிடபடுவதால் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கில் காலை 9 மணி அளவில் இத்திரைபடத்தினை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் திரையரங்கு கட் அவுட்டர் மீது மலர்களை தூவ சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ உரிய அனுமதி வழங்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ரஜினி ரசிகர்கள் மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு வருவாய்க் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு தற்போது வட்டாட்சியரின் மேற்பார்வையில் இருந்து வருகிறது.

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலையில் சம்பந்தப்பட்ட திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கட்டவுட் அமைக்கும் பணி உள்ள ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.

இதனிடையே தர்பார் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக ரஜினி ரசிகர்களால் சேலம் மாநகரம் பெரும்பாலான பகுதிகளில் சுவர்ச் சித்திரங்கள் வரைந்து சுவரை ஒட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து ரஜினி ரசிகர்கள் கூறுகையில் ஆறு துறைகளின் ஒப்புதலுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் தங்களது அனுமதி அளிக்கும் என நம்புவதாகவும் அன்றைய தினம் செண்டை மேளங்கள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ரசிகர்களின் விண்ணப்பம் மாநகர காவல்துறை, விமான போக்குவரத்து ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

அதை பரிசீலித்த காவல்துறை ஹெலிகாப்டரை வேடிக்கை பார்க்க ரசிகர்கள் திரளும்போது போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிவித்து அனுமதிக்க வழங்க மறுத்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே