ஈரான் மருத்துவமனையில் தீ விபத்து: 13 பேர் பலி

ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 13 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன.

மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறியபடி இருக்கிறது.இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 307 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே