அரசு சார்பில் வெளியான அழைப்பிதழ்..; இடம்பெறாத துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர்.!!

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காத நிலையில், மாநகராட்சி சார்பில் இன்று நடைபெறும் திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதலமைச்சரின் ஆலோசனை கூட்டங்களில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு வந்தார்.

ஆனால் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.

அதே சமயம் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்கவிழாவுக்காக அரசு தரப்பில் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதலமைச்சரின் பெயர் இடம்பெறவில்லை.

ஆயினும் இதே விழாவுக்காக தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் ஓபிஎஸ் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே