அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் புகார்..!!

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு தேவனஹள்ளி விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே சசிகலா வரும் 8ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இன்று அறிவித்தார்.

இந்த நிலையில் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, மற்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர், சென்னை டிஜிபி அலுலவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுகவைச் சேர்ந்தவர்களை தவிர, வேறு யாரும் கட்சிக் கொடியை பயன்படுத்தகூடாது, என புகார் அளித்துள்ளோம் என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே