இந்தியாவா? “இந்தி”-யாவா? சர்ச்சை.. கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி… எச்.ராஜா பதில்..!!

திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப் ஊழியர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டதாகவும் எனக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் நீங்கள் இந்தியரா? எனக் கேட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்கள் பதிவாகி வந்தன. இது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார்.

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது, முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. CISF விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். திக, திமுகவின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழி பெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு” என மீண்டும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே