சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக சர்வசேத விமான சேவை கடந்த 8 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவை மட்டும் இயங்கி வருகிறது.

கரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஆனாலும் சரக்கு விமான சேவை, வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை அழைத்து வருவது, இந்தியாவில் சிக்கி இருக்கும் வெளிநாட்டினரை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவது போன்ற சிறப்பு விமான சேவைகள் வந்தே பாரத் என்ற திட்டம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று காரணமாக இதுவரை 92.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 44,489 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1,35,223 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே