கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ, மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு: சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

கரோனா தொற்றை கட்டுப்படுத்தபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. இதற்கிடையில், தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை பள்ளியில் 57 மாணவிகள்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை முடியும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்பவர்களாக இருந்தாலும் தனி அறை, கழிப்பறைஇருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தனி அறை, கழிப்பறை வசதிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவேண்டும். காய்ச்சல், சளி போன்றஅறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், வேப்பேரி, சோழவரம், ஆவடி ஆகிய பகுதிகளில், சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டதால் தொற்று அதிகம் பரவிஉள்ளது. பல இடங்களில், முகக்கவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை.

தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கள் தொண்டர்களை காக்கவும், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், அரசியல் கட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும், தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சி தலைவர்களின்பங்களிப்பு இருந்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினை இருக்கிறதா என்று கண்காணிக்கப்படு கிறது. பெற்றோரும் மாணவ,மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே