தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 27 மாவட்டங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொற்று குறைவான பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் , இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 50 டோக்கன் கொடுத்து பத்திரவுப்பதிவு செய்யலாம்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் வரும் திங்கள் கிழமை முதல் செயல்படலாம். 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடர்கிறது. சென்னையில் தொற்று குறைவதால் 27 மாவட்டங்களில் சென்னையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே