தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 67 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 124 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்த்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிர் இழந்துள்ள நிலையில் நேற்றுவரை பாதிப்பு 67 ஆக இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட 1,500 பேரில் 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

அவர்களில் 45 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி சென்று திரும்பிய 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களை தொடர்புகொள்ளமுடியவில்லை. அவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 45 பேர் போக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டநிலையில், இன்று மட்டும் மொத்தம் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே