ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பின்னர் அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரரான மேத்திவ் வாட் 32 பந்துகளில் 58 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 38 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது.

இந்திய அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுவேந்திர சஹால், ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும் கே.எல்.ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஷிகர் தவான் 36 பந்துகளில் 52 ரன்களையும், விராட் கோலி 24 பந்துகளில் 40 ரன்கலையும், கே.எல். ராகுல் 22 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே