டிவில்லியர்சின் அதிரடியால் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி..!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை 177 ரன்களை அடித்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்கள் அடித்தார். இதேபோல் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா 41 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் அணி வீரர் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர் தேவ்டட் படிக்கல் 35 ரன்கள் அடித்தார். 

நிதானமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 43 ரன்களை அடித்தார்.

விக்கெட் – கீப்பர் பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். 6 சிக்ஸர்களை விளாசினார் ஏபிடி வில்லியர்ஸ்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற போது முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து 4 ஆவது பந்தில் சிக்ஸர் விளாசினார் ஏபிடி வில்லியர்ஸ்.

இந்த சிக்ஸர் மூலம் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 37 ஆவது அரை சதத்தை அடித்தார்.

இது ஆர்சிபி அணிக்கு 6 ஆவது வெற்றியாகும்.

ஆட்டநாயகனாக ஏபிடி வில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே