கடலூர் மாவட்டத்தில் கன மழை, புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தை கூடுதலாக நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புரெவி’ புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சர்கள் நிமியமிக்கப்பட்டிருந்தனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்திற்கு மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக கூடுதல் பாதிப்பு உள்ளதால், சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அமைர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே