புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை – மு.க.ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் உதவிக்காகக் காத்திராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்தியக் குழுவிடம் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதோடு உரிய நிதியினையும் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளும், 3 லட்சத்திற்கும் அதிகமான விளைநிலங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூர், திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடி நிவாரணத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே